இலங்கை பிரதான செய்திகள்

பல்கலைக்கழக மாணவர் மீதான தாக்குதல் குறித்த விசாரணை அறிக்கை காவல்துறை ஆணைக்குழுவிடம் ஒப்படைப்பு


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பல்கலைக்கழக மாணவர் மீதான தாக்குதல்கள் குறித்த காவல்துறை மா அதிபரின் விசாரணை அறிக்கை காவல்துறை ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரத்தில் இந்த  அறிக்கை பொலிஸ் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டதாக ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாச குரே தெரிவித்துள்ளார்.

இதன்படி குறித்த அறிக்கை எதிர்வரும் வியாழக்கிழமை ஆணைக்குழுவின் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

இந்த விசாரணையின் போது எதிர்காலத்தில் எடுக்கப்பட நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கப்பட உள்ளதாகத்  தெரிவிக்கப்படுகிறது.

மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் போது 80 மாணவர்கள் காயமடைந்தனர் என குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

சம்பவம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு காவல்துறை ஆணைக்குழு, காவல்துறை மா அதிபரிடம் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers