இலங்கை

பொதுபல சேனா குறித்து பிரசன்ன ரணதுங்க போலிப் பிரச்சாரம் செய்கின்றார்


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பொதுபல சேனா இயக்கம் தொடர்பில் கூட்டு எதிர்க்கட்சியின் அழைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க போலிப் பிரச்சாரம் செய்து வருவதாக பொதுபல சேனா இயக்கத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பேராசிரியர் திலன்த விதானகே  குற்றம் சுமத்தியுள்ளார்.

அண்மையில் பிரான்ஸிற்கு சென்றிருந்த போது பிரசன்ன ரணதுங்க போலிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக அவர்  குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஸவை தேர்தலில் தோற்கடிக்கச் செய்ய, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஞானசார தேரருக்கு பணம் வழங்கியதாக பிரசன்ன ரணதுங்க சுமத்திய குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டு குறித்து பகிரங்க விவாதம் நடத்தத் தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.