குளோபல் தமிழ்ச் செய்தியாளர்;
கிளிநொச்சி மாவட்ட தமிழரசுக் கட்சி உறுப்பினர்களுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் அவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் இடம்பெற்றது.
வடக்கு மாகாண சபையில் இடம்பெற்ற குழப்பங்களை அடுத்தும், புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பிலும் கட்சி உறுப்பினா்களிடமும் மக்களிடமும் தமிழரசு கட்சி மீது அதிருப்தி ஏற்பட்டிருந்த நிலையில் அவா்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன் போது எதிர் கட்சி தலைவரால் சம கால அரசியல் தொடர்பில் கட்சி உறுப்பினா்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
இச் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினா் சி. சிறிதரன், மாகாண சபை உறுப்பினர்களான த.குருகுலராஜா, அரியரத்தினம், பசுபதிபிள்ளை ஆகியோரும் கலந்துகொண்டனா்.
Spread the love
Add Comment