உலகம் பிரதான செய்திகள்

நைஜீரியாவில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 19 பேர் பலி


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

நைஜீரியாவில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலல் 19 பேர் கொல்லப்பட்டுள்ளனர். போகோ ஹாராம் என்ற தீவிரவாத அமைப்பினர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.

மேலும் தாக்குதல் சம்பவத்தில் 23பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிவில் பாதுகாப்புப் படையினரை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நைஜீரியாவின் வடகிழக்கு நகரான மைடுகுரி ( Maiduguri) ல் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த மக்களுக்காக இரங்கல் வெளியிடும் நிகழ்வு ஒன்றிலேயே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

போகோ ஹாராம் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த நான்கு தற்கொலைக் குண்டுதாரிகள் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap