இந்தியா பிரதான செய்திகள்

இந்திய ஜனாதிபதி தேர்தல் – தமிழக சட்டப்பேரவை பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு:-

இந்தியாவின் ஜனாதிபதி தேர்தலின் போது தமிழக சட்டப்பேரவை வளாகத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தேர்தல் பார்வையாளரும் தலைமை தேர்தல் அதிகாரியுமான ராஜேஷ் லக்கானி ஆய்வு செய்துள்ளார்.

இந்திய ஜனாதிபதித்; தேர்தல் எதிர்வரும 17ம் திகதி நடைபெறவுள்ள நிலையில் தமிழகத்தில் சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள குழுக்கள் கூட்ட அரங்கில் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்தநிலையில் தேர்தலுக்கான வாக்குப்பெட்டி நேற்று முன்தினம் வந்த நிலையில், அப்பெட்டியை தமிழக தலைமை தேர்தல் அதிகாரியும், ஜனாதிபதித்; தேர்தல் பார்வையாளருமான ராஜேஷ் லக்கானி நேற்று பார்வையிட்டதுடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தார்.

இதேவேளை வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளைப் பார்வையி:வதற்காக இன்றையதினம் டெல்லியில் இருந்து சிறப்பு பார்வையாளர் அன்சு பிரகாஷ் இன்று தமிழகம் வரவுள்ளதாகவும் அவர் இன்று மாலை நடக்கும் தேர்தல் தொடர்பான கூட்டத்தில் பங்கேற்க உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.