குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இந்தியா, கொட்டோ ஸ்ரீ நாக விஹாரையின் பீடாதிபதி அமரர் மாதுலுவாவே சோபித தேரருக்காக கிராமம் ஒன்று அமைக்க உள்ளது. அனுராதபுரம் மாவட்டத்தில் இந்த கிராமம் அமைக்கப்பட உள்ளது.
எல்பாத்தகம என்னும் கிராமமே சோபித தேரர் கிராமாக அபிவிருத்தி செய்யப்பட உள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய முன்னிலையில் இது தொடர்பான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சி;ங் சாந்துவும், வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யு.கே.கே. அதுகோரளவும் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட உள்ளனர்.
இந்த கிராமத்தை அபிவிருத்தி செய்ய இந்திய அரசாங்கம் 300 மில்லியன் ரூபாவினை வழங்க உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 153 புதிய வீடுகள் அமைக்கப்பட உள்ளன.
Spread the love
Add Comment