குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கொக்கேய்ன் போதைப் பொருள் மீட்கப்பட்ட காரணத்தினால், சுங்கத் திணைக்களத்தின் மூன்று அதிகாரிகளுக்கு இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் ரத்மலானைப் பிரதேசத்தில் பாரியளவில் கொக்கேய்ன் போதைப் பொருள் மீட்கப்பட்டிருந்த சம்பவம் தொடர்பில் ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்திருந்தனர்.
இந்தநிலையில் கொக்கேய்ன் போதைப் பொருளுடன் கொள்கலனை விடுவித்த சுங்கத் திணைக்கள அதிகாரிகளே இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சுங்கத் திணைக்கள அதிகாரிகள் கொள்கலனை விடுவித்ததனைத் தொடர்ந்து, அந்தக் கொள்கலன் ரத்மலானைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. சுமார் 3.2 பில்லியன் ரூபா பெறுமதியான கொக்கேய்ன் போதைப் பொருள் மீட்கப்பட்டிருந்தது.
Spread the love
Add Comment