இலங்கை பிரதான செய்திகள்

பாதுகாப்புச் செயலாளருக்கும் பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பாதுகாப்புச் செயலாளர் கபில வைத்தியரட்னவிற்கும், இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டோரிஸ் ( James Dauris )க்கும் இடையில் சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.

இரு தரப்பு உறவுகள், இரு நாடுகளுக்கும் பொதுவான விடயங்கள் என்பன குறித்து இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த சந்திப்பில் இலங்கைக்கான பிரித்தானியாவின் பிரதி உயர்ஸ்தானிகர் ரொம் பேர் ( Tom Burn) னும் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கபில வைத்தியரட்ன, அண்மையில் பாதுகாப்புச் செயலாளராக பதவியை ஏற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers