இலங்கை

தேசிய இளைஞர் தின முதலாவது கொடி ஜனாதிபதிக்கு அணிவிப்பு


ஜூலை மாதம் 26ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் தேசிய இளைஞர் தினத்துடன் இணைந்ததாக தேசிய இளைஞர் சேவை மன்றமும் இலங்கை இளைஞர் சங்க பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இளைஞர் கொடி தின நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் முதலாவது கொடியை ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேனவும் அணிவிக்கும் நிகழ்வு இன்று  ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

சர்வதேச இளைஞர் வருடமாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்த 1985ஆம் ஆண்டு தேசிய இளைஞர் கொடி தினமும் பிரகடனப்படுத்தப்பட்டது

2011ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை நடைமுறைப்படுத்தப்படாதிருந்த இந்நிகழ்ச்சித்திட்டம் மீண்டும் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் 2016ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இம்முறை இளைஞர் கொடி தினம் 28 ஆம் திகதி இடம்பெறுகிறது.

நாடளாவிய ரீதியில் தாபிக்கப்பட்டுள்ள 13 ஆயிரம் இளைஞர் மன்றங்கள் 334 இளைஞர் மன்ற பிரதேச குழுக்கள் மற்றும் 26 இளைஞர் மன்ற மாவட்ட குழுக்களின் உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன், இக்கொடி நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Add Comment

Click here to post a comment

Leave a Reply