குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மருத்துவ பீட மாணவ செயற்பாட்டாளர் ரயன் ஜயலத், கடத்தப்படவில்லை எனவும் மாணவரை கைது செய்யவே காவல்துறையினர் முயற்சித்தனர் எனவும் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
எனினும் மாணவரை கைது செய்ய முயற்சித்த விதத்தில் சில சிக்கல்கள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ள அவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மாணவரை கைது செய்ய முயற்சித்த விதம் வருந்ததக்கது என குறிப்பிட்டுள்ளார். காவல்துறை வாகனமே இதற்காக பயன்படுத்தப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Add Comment