இலங்கை

அத்தியாவசிய சேவைகள் தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் சட்டரீதியானது – திலங்க சுமதிபால


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

அத்தியாவசிய சேவைகள் தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் சட்ட ரீதியானது என பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விநியோகத்தை அத்தியாவசிய சேவையாக அரசாங்கம் அறிவித்திருந்த  வர்த்தமானி அறிவித்தல் சட்டவிரோதமானது என கூட்டு எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியிருந்தது.

எனினும் வர்த்தமானி அறிவித்தல் சட்ட ரீதியானதே என  தெரிவித்துள்ள பிரதி சபாநாயகர்  பாராளுமன்ற நிலையியற் கட்டளை 43ன் அடிப்படையில் சட்ட ரீதியாக வர்த்தமானி அறிவித்தல் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும் எதிர்க்கட்சியினர் பாராளுமன்ற நடவடிக்கைகளை சீர்குலைக்க முயற்சிப்பதாகவும் அவர்  தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply