குளோபல் தமிழ்ச் செய்தியாளர்-
மஹாவலி அபிவிருத்தித் திட்டத்தின் பின்னர், இன்றைய தினம் கைச்சாத்திடப்பட்ட ஹம்பாந்தோட்டை துறைமுகம் குறித்த உடன்படிக்கையே நாட்டுக்கு கிடைத்த மிகப் பாரிய முதலீடாகும் என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த உடன்டிக்கையினால் திறைசேரிக்கு 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கப் பெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மஹாவலி அபிவிருத்தித் திட்டத்தின் போது நாட்டுக்கு பாரியளவில் முதலீடுகள் கிடைக்கப் பெற்றது எனவும் அதன் பின்னர் இந்த முதலீடே பாரியளவிலானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Add Comment