இலங்கை பிரதான செய்திகள்

சுவிஸ் புலம்பெயர் இலங்கையர்களை நாடு திரும்புமாறு அரசாங்கம் கோரிக்கை


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

சுவிட்சர்லாந்து வாழ் இலங்கையர்களை நாடு திரும்புமாறும்   நாட்டுக்கு திரும்பி, நாட்டின் அபிவிருத்திக்கு பங்களிப்பு வழங்குமாறும் இலங்கை அரசாங்கம் கோரியுள்ளது.

சுவிட்சர்லாந்தில் சுமார் 50,000த்திற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் வாழ்ந்து வருவதாக புனர்வாழ்வு, புனரமைப்பு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, இந்து சமய விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்து வாழ் இலங்கைச் சமூகம், சுவிட்சர்லாந்திற்கு காத்திரமான பங்களிப்பினை வழங்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்து தேசிய தினத்தை முன்னிட்டு இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் Heinz Walker- Nederkoorn இன் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

1 Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

  • சுவிட்சர்லாந்து வாழ் இலங்கையர்களை நாடு திரும்புமாறும், நாட்டின் அபிவிருத்திக்கு பங்களிப்பு வழங்குமாறும் கோரிக்கை முன்வைத்துள்ள, -மக்களால் தெரிவு செய்யப்படாத அமைச்சர் திரு. சுவாமிநாதனுக்கு-, இதற்காகவா அரசு பதவி வழங்கியது?

    வரவு செலவுத் திட்டத்தில் மிகப் பெரியதொரு தொகையை வருடா வருடம் இராணுவத்துக்கு அரசு ஒதுக்கி வருகின்றபோதும், இராணுவம் கோரும், ‘முகாம்களை மூடி மக்களுக்குத் தமது காணிகளை விட்டுக் கொடுப்பதற்காக’, தனது அமைச்சுக்கு ஒதுக்கிய நிதியைத் தண்டமாக வழங்க இவர் எதற்காக முண்டியடிக்கின்றார்? புனர்வாழ்வு மற்றும் புனரமைப்புப் பணிகளுக்கான நிதியைப் பாதிப்புக்குள்ளான தமிழ் மக்களுக்குப் பயன்படுத்துவதை விடுத்து, இராணுவத்துக்கு வலிந்து தண்டமாக வழங்குவதும், அரசுக்கு இவர் செய்யும் நன்றிக்கடனோ?

    எல்லாம் சரி, இவர் தயவில் யாரும் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாகச் செல்லவில்லையே? தாமாகச் சென்றவர்களுக்கு, நாடு திரும்புவது குறித்தும், அதற்கான கால நேரம் குறித்தும் நன்றாகவே தெரியும்! தனக்கிட்ட பணியைச் செய்வதை விடுத்து, பிறர் விடயங்களில் தலையிடுவது, கற்றோர் பண்பல்ல!