குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கள்வர்களை அரசாங்கம் ஒரு போதும் பாதுகாக்காது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஹட்டனில் நேற்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள நிலையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வெளிப்படைத்தன்மையுடன் கூடிய நம்பகமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டியது அவசியமானது என குறிப்பிட்டுள்ள அவர் அரசாங்கம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கள்வர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப் போவதில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
Add Comment