இலங்கை

ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவளிக்கப்படும் – சுதந்திரக் கட்சி


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவளிக்கப்படுவது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் அங்கம் வகிக்கும் ஆளும் கட்சியின் அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள் பிரதி அமைச்சர்கள் இந்த தீர்மானத்தை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்கவிற்கு அறிவித்துள்ளனர்.

நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னதாக ரவி கருணாநாயக்கவை பதவி விலகுமாறு கோருவதனை தவிர ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் மாற்று வழி கிடையாது என தெரிவித்துள்ளனர்.

விரைவில் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என ஆளும் தரப்பு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply