குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அரசாங்கத்தில் தொடர்ந்தும் இணைந்திருக்க முடியாது என பிரதி அமைச்சர் நிசாந்த முத்துஹெட்டிகம தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கத்தில் எந்த ஒருவரையும் நம்ப முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். நம்பக்கூடிய ஒரேயொரு நபர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மட்டுமேயாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
காலி பிரதேசத்தில் வைத்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Add Comment