இலங்கை

மியன்மாரிலிருந்து ஜனாதிபதிக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட யானைக்குட்டி தலதா மாளிகைக்கு வழங்கப்பட்டது


இரு நாடுகளுக்குமிடையே காணப்படும் நீண்ட கால உறவினை மேலும் பலப்படுத்தும் வகையில் மியன்மார் அரசினால் ஜனாதிபதிக்கு   பரிசாக வழங்கப்பட்ட ‘புலதிசி ராஜா’ எனும் பெயருடைய யானைக்குட்டி ஜனாதிபதி   மைத்ரிபால சிறிசேனவினால்    இன்று   உத்தியோகபூர்வமாக வரலாற்றுச் சிறப்புபெற்ற தலதா மாளிகைக்கு கையளிக்கப்பட்டது.

இன்று பிற்பகல் தலதா மாளிகைக்கு சென்ற  ஜனாதிபதி     வழிபாடுகளில் ஈடுபட்டு ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டதன் பின்னர் இடம்பெற்ற வைபவத்தின் போது யானைக்குட்டியை தலதா மாளிகைக்கு வழங்கி வைப்பதற்குரிய பத்திரம் தியவடன நிலமே நிலங்க தேலவிடம் கையளிக்கப்பட்டது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply