இலங்கை பிரதான செய்திகள்

18 வருடங்களின் பின் முகமாலை தேவாலய திருவிழா


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

முகமாலை புனித ஆரோக்கிய மாதா ஆலையத்தின்  வருடாந்த திருவிழா 18 வருடங்களின் பின்னர் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை 15.09.2017 ஆரம்பமாகி இடம்பெறவுள்ளது.

நாளை மறுதினம்  மாலை 4.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நவநாள் வழிபாட்டுடன் திருப்பலி நடைபெற்று 17.09.2017 காலை 06.30 மணிக்கு திருநாள் திருப்பலி  நடைபெற்று அன்னையின் ஆசீர்வாதம் இடம் பெறவுள்ளது
முகமாலையில் கடந்த காலத்தில் கடும் யுத்தம் இடம்பெற்ற பிரதேசமாக காணப்பட்டது.  யுத்தகாலத்தில் யுத்தக முன்னரங்க பகுதியாக சூனியப் பிரதேசமாக இருந்த முகமாலையில்  இருந்து மக்கள் இடம்பெயர்ந்து இன்னமும் முழுமையாக மீள்குடியேற்றம் இடம்பெறாத பிரதேசமாகவும் காணப்படுகிறது.

குறித்த பிரதேசத்தில் அதிகளவு ஆபத்தான வெடிப்பொருட்கள் காணப்படுவதோடு, தற்போது கண்ணி வெடி அகற்றும் நிறுவனங்கள் நெருக்கடிகளுக்கு மத்தியில் பணியில் ஈடுப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது

Add Comment

Click here to post a comment

Leave a Reply