இந்தியா விளையாட்டு

பத்மபூஷண் விருதுக்கு டோனியின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது


இந்தாண்டிற்கான பத்மபூஷண் விருதுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர்  மகேந்திரசிங் டோனியின் பெயரை இந்திய கிரிக்கெட் வாரியம் பரிந்துரை செய்துள்ளது.  மகேந்திரசிங் டோனி இதுவரை 90 டெஸ்ட், 302 ஒருநாள் போட்டிகள் மற்றும் 78 இருபதுக்கு இருபது  போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார்.

இதுவரை சர்வதேச போட்டிகளில் 15 ஆயிரத்திற்கும் அதிகமான ஓட்டங்களைப் பெற்றுள்ளதுடன்  அனைத்து ஐ.சி.சி. கோப்பைகளையும் வென்ற முதல்  அணித்தலைவர் என்ற பெருமைக்குரியவராகவும்  டோனி  காணப்படுகின்றார்.  2014ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற அவர் தற்போது ஒருநாள் மற்றும்  இருபதுக்கு இருபது  போட்டிகளில் விளையாடி வருகிறார்.

இந்தநிலையிலேயே  பத்மபூஷண் விருதுக்கு  டோனியின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது

Add Comment

Click here to post a comment

Leave a Reply