இலங்கை பிரதான செய்திகள்

மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரியை மூடுவதற்கு இடமளிக்கப்படாது – அரசாங்கம்


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரியை மூடுவதற்கு இடமளிக்கப்படாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. உயர்கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல இதனைத் தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் மாணவர்கள் வகுப்புகளுக்கு திரும்ப வேண்டுமென அவர் கோரியுள்ளார். தனியார் மருத்துவ கல்லூரி மூடப்படாது என்பதனை சூரியனையும் சந்திரனையும் போன்று தமக்கு உறுதியாக கூற முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பல்கலைக்கழக மாணவர்கள் இவ்வாறு போரட்டம் நடத்துவதனால் அவர்களுக்கே நட்டம் ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார்

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.