இலங்கை பிரதான செய்திகள்

களனி பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது :


களனி பல்கலைக்கழகம்  தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இரண்டு மாணவர்கள் குழுவிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக பல்கலைக் கழகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  மருத்துவ பீடம் தவிர்ந்த ஏனைய அனைத்து பீடங்களும் இவ்வாறு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் இன்று   நண்பகல் 12.00 மணிக்கு முன்னர் அனைத்து மாணவர்களையும்  பல்கலைக்கழக வளாகம் மற்றும் மாணவர் விடுதியில் இருந்து வெளியேறுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மறு அறிவித்தல் வரும் வரை மாணவர்கள் எவரும் பல்கலைக்கழக வளாகத்தில் இருப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.