தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இலங்கையின் தேசிய பிரச்சினைக்கு உரிய நேரத்தில் தீர்வு காணப்பட்டிருந்தால் கைதிகளாக உள்ள அதிகமானோருக்கு தற்போது ஏற்பட்டுள்ள நிலை ஏற்பட்டிருக்காது என சம்பந்தன் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ் அரசியல் கைதிகளில்; அனேகமானவர்களுக்கு எதிராக இருக்கும் ஒரேயொரு சாட்சி அவர்களின் விருப்பத்துக்கு மாறாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலம் மட்டுமே எனவும் மேற்படி கடிதத்தில் தெரிவிக்க்பபட்டுள்ளது.
இந்தக் கடிதத்தின் பிரதிகள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் நீதியமைச்சர் தலதா அத்துகோரள ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
Spread the love
Add Comment