குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.
ஐரோப்பிய ஓன்றியத்துடன் உடன்பாடு ஏற்படாமல் பிரித்தானியா அதிலிருந்து வெளியேறுவது நினைத்துப்பார்க்க முடியாத விடயம் என பிரித்தானியாவின் உள்துறை அமைச்சர் அம்பெர்ரூட் தெரிவித்துள்ளார். உடன்படிக்கை எதுவுமின்றி பிரித்தானியா வெளியேறும் பட்சத்தில் பாதுகாப்பிற்கு ஏற்படக்கூடிய ஆபத்து குறித்த கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
எங்கள் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக ஏதாவது ஓரு உடன்படிக்கை ஏற்படுவதை உறுதிசெய்வோம் என அவர் தெரிவித்துள்ளார். 2019 மார்ச் மாதம் பிரித்தானியா வெளியேறும்போது உடன்பாடு எதுவும் ஏற்படாத பட்சத்தில் அதனை எதிர்கொள்வதற்கான திட்டங்களை வகுத்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.உடன்படிக்கை எதுவும் ஏற்படாமல் வெளியேறுவது நினைத்துபார்க்க முடியாத விடயம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Add Comment