
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடமாகாண சபை உறுப்பினர்கள் , அமைச்சர்கள் மாகாண சட்டங்களை கற்குமாறு வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா தெரிவித்தார். வடமாகாண சபையின் 108ஆவது அமர்வு இன்றைய தினம் கைதடியில் உள்ள பேரவைக்கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போதே அவ்வாறு தெரிவித்தார்.மேலும் தெரிவிக்கையில் ,
வடமாகாண சபை ஆரம்பிக்கப்பட்டு நான்கு வருடங்கள் கடந்த நிலையிலும் இன்னமும் பல நியதி சட்டங்கள் உருவாக்கப்படவில்லை. உறுப்பினர்கள் மாகாண சட்டங்களை கற்று , தங்கள் அதிகாரம் என்ன எல்லை என்ன என்பதனை முதலில் அறிய வேண்டும். அதன் பின்னர் அதற்குள் நின்று நியதி சட்டங்களை உருவாக்க வேண்டும்.
நியதி சட்டங்களை மற்றைய மாகாண நியதி சட்டங்களை பெற்று அதனை எமது மாகாணத்திற்கு ஏற்றவாறு மாற்றி உருவாக்கலாம். அதனை கூட செய்யாது கால தாமத படுத்திக்கொண்டு உள்ளோம் என தெரிவித்தார்.
Add Comment