இலங்கை பிரதான செய்திகள்

மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரி குறித்த தீர்வுத்திட்டம் ஏற்புடையதல்ல – GMOA


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் அரசாங்கத்தின் தீர்வுத் திட்டம் ஏற்புடையதல்ல என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள தீர்வுத் திட்டத்தினால் மெய்யான பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காது என சுட்டிக்காட்டியுள்ளது.

அரசாங்கத்தின் தீர்வுத் திட்டத்தில் சில ஆரோக்கியமான விடயங்கள் கூறப்பட்டிருந்தாலும் அதனை இறுதித் தீர்வுத் திட்டமாக ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளது. ஜனாதிபதி இறுதித் தீர்வுத் திட்டமொன்றை வழங்குவதாக உறுதிமொழி வழங்கியிருந்த போதிலும், இந்த தீர்வுத் திட்டம் குறித்த ஆவணத்தில் ஜனாதிபதி கையொப்பமிடவில்லை என அரசாங்கத் தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகமே கையொப்பமிட்டுள்ளார் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.