உலகம் பிரதான செய்திகள்

ஆப்கானிஸ்தானின் காபூலில் இடம்பெற்ற தாக்குதலில் 4 பேர் பலி


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் மேலும் 13 பேர் வரையில் காயமடைந்துள்ளதாக பாதுகாப்புத் தரப்பினர் தெரிவிக்கின்றனர். இந்த தற்கொலை குண்டுதாரி 12 அல்லது 13 வயது மதிக்கத் தக்க சிறுவன் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஐ.எஸ் தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வடையக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்மைய நாட்களில் காபூல் நகர் மீதான தாக்குதல் சம்பவங்கள் வெகுவாக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.