இலங்கை பிரதான செய்திகள்

அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

அநுராதபுரம் சிறைச்சாலையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை  முன்னெடுத்த அரசியல் கைதிகள் மூவரினதும் போராட்டம் இன்றுடன் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.  அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்றிருந்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் பிரதிநிதிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளே அரசியல் கைதிகள் மூவரினதும் உண்ணாவிரத போராட்டத்தை நீராகாரம் வழங்கி இடைநிறுத்திவைத்தனர்.

அநுராதபுரம் சிறையில் அரசியல் கைதிகள் மூவர் கடந்த செப்ரெம்பர் 25ஆம் திகதி தொடக்கம் உண்ணாவிரத  போராட்டத்தை முன்னெடுத்தனர்.  அவர்களின் போராட்டத்தை  இடைநிறுத்துவதற்கு, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களும் மக்கள் பிரதிநிதிகளும் நேற்று தீர்மானித்திருந்தனர்.

இந்த நிலையில், யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் வழங்கிய வாக்குறுதியையடுத்து உண்ணாவிரத போராட்டத்தை அரசியல் கைதிகள் மூவரும் இடைநிறுத்தினர். இந்த விடயத்தை சட்டரீதியாக அணுகி நடவடிக்கை எடுப்பதாக அவர்களுக்கு உறுதியளிக்கப்பட்டது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers