ஜம்மு காஷ்மீர் மாநிலம் உரி செக்டார் பகுதியில் இந்திய எல்லைக்குள் உடுருவ முயன்ற 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக இந்திய பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா மாவட்டத்தில் உள்ள உரி பகுதியில் இந்திய – பாகிஸ்தான் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் வழக்கமான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த வேளையில் எல்லையை கடந்து இந்திய பகுதிக்குள் இரு தீவிரவாதிகள் நுழைந்துள்ளனர்.
இதனை அவதானித்த பாதுகாப்பு படையினர் அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்ததும் அவர்கள் அதனைப் பொருட்படுத்தாது இந்திய எல்லைக்குள் முன்னேறி வந்ததால் பாதுகாப்பு படையினர் இருவரையும் சுட்டுக்கொன்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love
Add Comment