Home இந்தியாபாக்ஜலசந்தி கடலை தொடர் ஓட்ட முறையில்  நீத்தி கடந்து சாதனை படைத்த 12 பேர்:

பாக்ஜலசந்தி கடலை தொடர் ஓட்ட முறையில்  நீத்தி கடந்து சாதனை படைத்த 12 பேர்:

by admin
இலங்கை தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரை பாக்ஜலசந்தி கடலை 10 மணிநேரம் 10 நிமிடங்களில் 12  நீச்சல் வீரர்கள், வீராங்கனைகள் தொடர் ஓட்ட முறையில் (RELAY RACE)  நீந்தி சாதனை படைத்தனர்.
மகாராஸ்ட்ரா மாநிலம் தானே பகுதியில் செயல்பட்டு வரும் ராம் சேது திறந்த நீர் நீச்சல் அறக்கட்டளையை சோந்நத மகராஸ்ட்ரா மாநிலத்தை சேர்ந்த 12   நீச்சல் வீராங்கனைகள்  இரண்டு  குழுக்களாக  பிரிந்து இலங்கை தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடிக்கு வரை உள்ள சுமார் 30 கி.மீ தொலைவிலான பாக்ஜலசந்தி கடற்பரப்பினை நீந்தி கடப்பதற்காக இந்திய வெளியுறவுதுறை, இலங்கை தூதரகம் மற்றும் பாதுகாப்புதுறை அமைச்சகத்திற்க்கு  அனுமதி  கோரியிருந்தனர்.
இந்திய இலங்கை இரு நாட்டு அனுமதியும் கிடைத்த நிலையில் வெள்ளிகிழமை  பிற்பகல் ராமேஸ்வரம் மீன்பிடி இறங்குதளத்திலிருந்து இரண்டு படகுகளில் தங்கள் நீச்சல் பயிற்சியாளர் தலைமையில் மீனவர்கள் உள்ளிட்ட 20 பேர் கொண்ட குழுவினர் இலங்கை தலைமன்னார் சென்றனர்.
தலைமன்னாரிலிருந்து சனிக்கிழமை காலை 6.30 மணிக்கு கடலில் குதித்து தொடர் ஓட்ட முறையில் (RELAY RACE)  நீந்த தொடங்கி 12 பேரும் மாலை  4.40 மணியளவில் (10 மணி நேரம் 20 நிமிடங்களில் நீந்தி) தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியை வந்தடைந்தார். நீந்தி சாதனை படைத்தவர்களை சுங்கத்துறை, மரைன் போலீசார், சுற்றுலாப்பயணிகள் அரிச்சல்முனையில் வரவேற்றனர்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More