இலங்கை பிரதான செய்திகள்

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை ஈ.பி.டி.பி தனித்தே எதிர்கொள்ளும் – டக்ளஸ்

நடைபெறவிருக்கும் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி தனித்தே போட்டியிடுவதற்கு தயாராகி வருகின்ற நிலையில் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் பேச்சுவார்த்தைகளுக்கு அமைவாக பல இடங்களில் தனித்தும் சில இடங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினருடன் நட்புறவைப் பேணும் முகமாக இணைந்தும் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் குறித்தும் பிராந்திய கூட்டு தொடர்பாகவும் பேச்சுவார்த்தைகளை ஈ.பி.டி.பி முன்னெடுத்து வருகின்றது என செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

நேற்றையதினம்(21.11.2017) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக் கட்சிகளுடனான சந்திப்பில் கலந்துகொள்ளுமாறு ஜனாதிபதியினால் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று ஈ.பி.டி.பியின் சார்பில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான குழுவினர் கலந்து கொண்டனர்.
அந்தச் சந்திப்பில் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் தொடர்பாகவும் நாட்டின் சமகால அரசியல் சூழல்நிலை தொடர்பான பல விடயங்களும் கலந்துரையாடப்பட்டது.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களில் தனித்துப் போட்டியிடுவதற்கான ஆயத்தங்களை ஈ.பி.டி.பி செய்திருப்பதாகவும் நட்புறவைப் பேணும் முகமாக சில இடங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சின்னத்தில் இணைந்தும்இ பல இடங்களில் ஈ.பி.டி.பி தனது வீணைச்சின்னத்தில் தனியாகவும்இ போட்டியிடுவதற்கு முடியும் என்று தெரிவித்தார்.

இதேவேளை ஈ.பி.டி.பி தனித்து வீணைச்சின்னத்தில் போட்டியிடும் இடங்களில் கருத்து ஒருமைப்பாடுடைய முற்போக்குச் சக்திகளுடனும் ,சிறுகட்சிகளுடனும்,  பொது மற்றும் சமூக அமைப்புக்களுடனும் இணைந்து பிராந்தியக் கூட்டமைத்து போட்டியிடுவதற்கும் ஈ.பி.டி.பி தயாராக இருக்கின்றது என்றும் அது தொடர்பான பேச்சுவார்த்தைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவகின்றது என்றும் மேலும் தெரிவித்தார்.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap