இலங்கை பிரதான செய்திகள்

தரம் குறைந்த எரிபொருளைக் கொண்ட கப்பல் தொடர்ந்தும் திருகோணமலை கடலில் தரித்து நிற்கின்றது


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

தரம் குறைந்த எரிபொருளைக் கொண்ட கப்பல் தொடர்ந்தும் திருகோணமலை கடலில் தரித்து நிற்பதாக தெரிவிக்கப்படுகிறது.   இந்திய ஒயில் நிறுவனத்தினால் இந்த தரம் குறைந்த எரிபொருள் கப்பல் மூலமாக இலங்கைக்கு வழங்கப்பட்டிருந்தநிலையில்  இந்த கப்பல் இன்னமும் திருகோணமலை துறைமுகத்தில் தரித்து நிற்பதாக பெற்றோலிய வள அமைச்சு தெரிவித்துள்ளது.

எவ்வாறெனினும் இந்த கப்பலில் காணப்படும் எரிபொருளை மீளப் பெற்றுக் கொள்ளும் திட்டம் கிடையாது என அமைச்சு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும் தரம் குறைந்த எரிபொருட்களை விநியோகம் செய்ய இடமளிக்கப் போவதில்லை எனவும்  பெற்றோலிய வள அமைச்சு தெரிவித்துள்ளது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.