உலகம் பிரதான செய்திகள்

சீனாவில் குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 10 பேர் பலி


சீனாவின் துறைமுக நகரான தியான்ஜென் பகுதியில் உள்ள அடுக்குமாடி  குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 10 பேர்    உயிரிழந்துள்ளனர்.  குறித்த அடுக்குமாடி குடியிருப்பில் ஊழியர்கள் நேற்று  புனரமைப்புபணிகளில் ஈடுபடிருந்தபோது   அடுக்குமாடி குடியிருப்பின் 38வது மாடியில் திடீரென பிடித்துள்ள தீ   ஏனைய பகுதிகளுக்கும் பரவியுள்ளது.

தகவலறிந்த  அங்கு சென்ற தீயணைப்பு படைவீரர்கள்   உயிரிழந்த 10 பேரின் உடல்களை மீட்டுள்ளனர்.  மேலும் காயமடைந்த  5 Nரை மீட்டு    மருத்துவமனைகளில் சேர்த்துள்ளனர்.  முதல் கட்ட விசாரணையில், உள் அலங்காரப் பொருட்களில் தீப்பிடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.