இந்தியா பிரதான செய்திகள்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் களமிறங்கும் விஷால் நாளை வேட்பு மனு தாக்கல் – கமல் ஆதரிப்பாரா?

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சட்டமன்றத் தொகுதியான சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் ( ஆர்.கே.நகர்) எதிர் வரும் 21-ம் திகதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தொகுதியில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க. சார்பில் மதுசூதனன், தி.மு.க. சார்பில் மருது கணேஷ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இவர்கள் தவிர டிடிவி தினகரன், ஜெ.தீபா, கலைக்கோட்டுதயம் உள்ளிட்ட வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். இந்நிலையில் நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால் ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.

இதேவேளை  விஷாலுக்கும் கமலுக்கும் இடையே கருத்து வேறுபாடு என வெளியாகிய தகவலில் உண்மை இல்லை எனக் கூறப்படுகிறது. அவர்கள் இருவருக்கும் எவ்வித கருத்து மோதலும் இல்லை என்றும் இன்னும் ஓரிரு நாள்களில் கமல்ஹாசனே விஷாலை வெளிப்படையாக ஆதரிப்பார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகர் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாக லஞ்சம், ஊழல் ஆகியவற்றுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார். இந்நிலையில் அவர் அரசியல் கட்சித் தொடங்குவதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்திருந்தார்.  அவரது டுவிட்டர் பதிவுகளிலும் அரசியல்  பேசப்பட்டது.  எப்போதும் மக்கள் பிரச்சினைகளை முன்னிறுத்தி டுவீட்டுகளை போட்ட வண்ணம் இருக்கும் கமல் வாசாலை ஆதரிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.