குளோபல் தமிழ் செய்தியாளர்
எதனையும் கதைக்க விரும்பவில்லை, என்னை விடுங்கோ என கூறி வடமாகாண முதலமைச்சர் ஊடகவியலாளர்களிடம் இருந்து நழுவி சென்றுள்ளார்.
யாழ்.நல்லூர் துர்க்காதேவி மணிமண்டபத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஆறுமுகநாவலர் மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் முதலமைச்சர் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். அந்நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் மண்டபத்தை விட்டு வெளியேறிய முதலமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி கேட்க முற்பட்டபோது ,இந்த காலகட்டத்தில் நான் எதுவும் பேச விரும்பவில்லை என்றார்.
அதன் போது ஊடகவியலாளர் ஒருவர் கூட்டமைப்பில் இருந்து பங்காளி கட்சிகள் வெளியேற போவதாக கூறுவது தொடர்பில் கேட்ட போது , அவர்கள் வெளியேற மாட்டார்கள். திரும்ப வந்து சேர்ந்துடுவார்கள்.இதற்கு மேல் நான் எதுவும் சொல்லவில்லை என கூறி வாகனத்தில் ஏறி சென்றார்.
Spread the love
Add Comment