பிரதான செய்திகள் விளையாட்டு

செரீனா அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரில் பங்கேற்பது உறுதி


அண்மையில்    ஒரு குழந்தைக்கு தாயான  அமெரிக்க நட்சத்திர வீராங்கனை செரீனா வில்லியம்ஸ்  எதிர்வரும்  ஜனவரியில் நடைபெறவுள்ள அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்  போட்டித் தொடரின் பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஜனவரியில் நடந்த  அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்  போட்டித் தொடரின்   போது, தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்த  செரீனா  இறுதிப்போட்டியில்  அவரது  சகோதரி வீனஸ் வில்லியம்ஸை வென்று, அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்   பட்டதையும் வென்றிருந்தார்.

36 வயதாகும் செரீனா, சில மாதங்களுக்கு முன் பெண் குழந்தைக்கு தாயாகிய நிலையில்  பயிற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். எனினும் அவுஸ்திரேலிய ஓபன் டென்னி போட்டியில் விளையாடும் அளவுக்கு அவர் முழுமையாக தயாராகவில்லை என அவருடைய பயிற்றுவிப்பாளர்; தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், ஏற்கனவே 23 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள செரீனா, வரும் ஜனவரியில் நடக்கும் அவுஸ்திரேலிய ஓபன் போட்டியில்  பங்குபற்றுகின்றார் என , போட்டிக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.