இந்தியாவின் மும்பை ஏர் விஸ்தாரா விமானத்தில் சகபயணி ஒருவர் தன்னை பாலியல் தொந்தரவு செய்ததாக “தங்கல்” திரைப்படத்தில் நடித்த பிரபல நடிகை சய்ரா வாசிம் முறையிட்டுள்ளார். தன்னுடைய இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் இந்தச் சம்பவத்தை விவரித்த சய்ரா வாசிம், விமானத்தில் தன் இருக்கைக்குப் பின்னால் அமர்ந்திருந்த பயணி தான் தூங்கிக் கொண்டிருக்கும் போது தொடர்ந்து தன் கழுத்திலும் பின்புறமும் தொட்டும் இடித்தும் தொந்தரவு செய்தார், என்று பதிவிட்டுள்ளார்.
இதனையடுத்து ஏர் விஸ்தாரா தனது ட்விட்டரில், “இது குறித்து விரிவான விசாரணை மேற்கொண்டுள்ளோம் சய்ரா வாசிமுக்கு இது தொடர்பாக என்ன உதவிகள் வேண்டுமோ அதனைச் செய்வோம். இத்தகைய நடத்தையை ஒரு போதும் நாங்கள் அனுமதிக்கப்போவதில்லை.” என்று பதிவிட்டுள்ளது.
Spread the love
Add Comment