இந்தியா பிரதான செய்திகள்

மும்பையின் கைரானி சாலையின் கடையில் தீ விபத்து – 12 பேர் பலி…

மும்பை: கைரானி சாலையில் உள்ள கடையில் தீ விபத்து - 12 பேர் உயிரிழப்பு

மும்பையின் கைரானி சாலையில் உள்ள கடை ஒன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீவிபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவிபத்து அதிகாலை நேரம் ஏற்பட்டதனால் கட்டிடத்தின் உள்ளே பலர் தூங்கிக் கொண்டு இருந்தவர்கள் தீயில் சிக்கி கொண்டுள்ளனர்.

தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படையினர் சென்று தீயை அனைத்து மீட்பு பணியில் ஈடுபட்டதில் 12 பேர் உயிரிழந்ததுடன்

மேலும் பலர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து தீ எரிந்துகொண்டு இருந்ததால் கூடுதலாக தீயணைப்பு படையினர் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.