சினிமா

மோகன்லாலின் புலிமுருகன் படத்தின் இரு பாடல்கள் ஒஸ்கர் விருதுப் பட்டியலில்

மோகன்லால் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த புலிமுருகன் படத்தில் இடப்பெற்றுள்ள இரண்டு பாடல்கள் ஒஸ்கர் விருதுப் பட்டியலில் தேர்வாகியுள்ளன.

வைஷாக் இயக்கத்தில் மோகன்லால், கமலினி முகர்ஜி, ஜெகபதிபாபு, நமீதா உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் புலிமுருகன் திரைப்படம் வெளியாகியிருந்தது. பெரும் பொருட்செலவில் வெளியான இப்படம் மலையாளத்தில் அதிக வசூலான படம் என்ற சாதனையை படைத்தது.

இந்த நிலையில், 90-வது ஒஸ்கர் விருதுகளுக்கான தெரிவுப் பட்டியலில் ‘ஒரிஜினல் பாடல்கள்’ பிரிவில் 70 பாடல்கள் தேர்வாகியுள்ளன. இதில் புலிமுருகன் திரைப்படத்தின் காடனயும் கால்சிலம்பே , மானத்தே மரிகுரும்பே இரண்டு பாடல்கள் இடப்பெற்றுள்ளன. புலி முருகன் திரைப்படத்துக்கு இசையமைப்பாளர் கோபி சுந்தர் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.