சினிமா

நயன்தாரா வழியில் ஓவியாவும்

களவாணி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்த நடிகை ஓவியா தொடர்ந்து பல படங்களில் நடித்திருந்தாலும், கலகலப்பு திரைப்படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்திருந்தது.  அத்துடன் அண்மையில் பிக்பொஸ் நிகழ்சிச மூலம் மேலும் பல ரசிகர்களை கவர்ந்திநததனை தொடர்ந்து அவருக்கு தற்போது பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்த வண்ணம் உள்ளது.

ராகாவா லாரன்சுடன் காஞ்சனா 3 படத்தில் தற்போது நடித்து வருகின்றார். இதுதவிர விஷ்ணு விஷாலுடன் சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்திலும் தெலுங்கு படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், ரசிகர்களுடன் டுவிட்டரில் உரையாடிய ஓவியா, தன்னுடைய அடுத்தப் படம் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். அதில் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தில் தான் அடுத்து நடிக்க உள்ளதாகவும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும்ம் ஓவியா தெரிவித்துள்ளார்.

 

சமீபகாலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடிக்க நடிகைகள் ஆர்வம் காட்டி வருகின்றார்கள். குறிப்பாக நயன்தாரா நடித்த டோரா, மாயா, அறம் ஆகிய படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. அதுபோல், ஓவியாவும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் படத்தில் நடிக்க ஆர்வமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.