இந்தியா பிரதான செய்திகள்

இந்திய தெலுங்கானா யாதாத்ரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரின் சடலங்கள் மீட்பு…


இந்தியாவின் தெலுங்கானா மாநிலம் யாதாத்ரி மாவட்டத்தில் உள்ள வீட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் உட்பட 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

கோழி பண்ணை ஒன்றில் பணிபுரியும் பாலாராஜூ என்பவர் கோழி பண்ணையில் வேலைப்பார்ப்பதற்காக  சில காலமாக தனது மனைவி, குழந்தைகள் மற்றும் மாமன்-மாமியாருடன் அங்குள்ள ஒரு வீட்டில் வசித்து வந்தார்.

அவர் இன்று வேலைக்கு வராததால் அவருடன் பணிபுரிபவர்கள் வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டில் உள்ள அனைவரும் உயிரிழந்து கிடந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டதனையடுத்து 7 பேரின் உடலையும் காவல்துறையினர் மீட்டுள்ளனர். மரணத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில் காவல்துறையினர்; வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap