சினிமா பிரதான செய்திகள்

“தமிழை சரியா உச்சரிக்க வைக்க வேண்டும்” – ஸ்ரீபிரியாவின் புத்தாண்டு சபதம்!

புதிய வருடத்தில், பிரபல நடிகை ஸ்ரீபிரியா தமிழிற்கு முக்கியம் அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார் தமிழ் மக்கள் அனைவருக்கும் ‘தமிழ்’ என்பதை சரியாக கூற வேண்டும் என்பதை தெரியப்படுத்த உள்ளதாக கூறியிருக்கிறார். இதனை அவரே தனது ருவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

‘தமிழ்’ என்கிற வார்த்தையை அனைவரும் சரியாக உச்சரிக்கும்படி இந்த புத்தாண்டில் நினைவுபடுத்த விரும்புகிறேன். “தமில்”, “தமுள்” என்றோ சொல்லக்கூடாது என தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதே போல், ன – ண வையும் சரிபார்த்த பின் உங்களது கருத்துகளைப் பதிவிடவும் என ஒரு நெட்டிசன் கமென்ட் செய்துள்ளார். அதற்கு ஶ்ரீபிரியா அது என் அறிவைத்தான்டி மொபைல் போனால் ஏற்பட்டு விடுகிறது என பதில் அளித்துள்ளார்.

அது ‘டமிழ்’ இல்லை.. தமிழ்.. ஆங்கிலத்தில் எழுதுவதை சரியாக எழுதலாமே.. செய்வதைத் திருந்தச் செய்யலாமே என இன்னொருவர் கமென்ட் செய்துள்ளார். இது யாருக்கு சூப்பர்ஸ்டார் ரஜினிக்கா? எனக் கேட்டு மற்றுமொரு நெட்டிசன் கேள்வி எழுப்பி உள்ளார்.

புத்தாண்டு பிறக்க இன்னும் ஒரே ஒரு நாள் இருக்கும் நிலையில் அடுத்த வருடம் இந்த விஷயங்களை செய்ய வேண்டும், இதைத் தவிர்க்க வேண்டும் என நிறைய திட்டங்களை பலரும் வகுத்து வரும் நிலையில்  பிரபல நடிகை ஸ்ரீபிரியா தமிழிற்கு முக்கியம் அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.