சினிமா பிரதான செய்திகள்

அண்ணனுடன் மீண்டும் இணையும் தனுஷ்


தனது சிறந்த நடிப்பாற்றலால் பல்வேறு படங்களிலும் நடித்து வரும் நடிகர் தனுஷ், அடுத்து, தனது அண்ணன் செல்வராகவன் இயக்கும் திரைப்படத்தில் இணைய இருக்கிறார்.  தனுஷ் நடிப்பில் வெளியான ‘வடசென்னை’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. அடுத்து தனுஷ் தனது இயக்கத்தில் தயாராகி வரும் பிரம்மாண்ட சரித்திர படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் நான்காவது முறையாக இணைகிறார்.

அதனை தொடர்ந்து, சமீபத்தில் வெளிவந்த ‘ராட்சசன்’ படத்தை இயக்கிய ராம்குமார் இயக்கத்தில் ஒரு சண்டை கலந்த மர்மப் படத்திலும் நடிக்கவிருக்கின்றார். அந்த படத்துக்கு பின்னர் செல்வராகவனும் தனுஷும் அடுத்த ஆண்டு இறுதியில் இணையவுள்ளனர்.

இப்படம் இவர்கள் இருவரின் கூட்டணியில் ஏற்கெனவே வந்த புதுப்பேட்டை படத்தின் இரண்டாம் பாகமாகவும் அமையாலாம் எனக் கூறப்படுகிறது. செல்வராகவன் தற்போது சூர்யா, ரகுல்பிரீத்தி சிங், சாய் பல்லவி நடிப்பில் என்.ஜி.கே படத்தை இயக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link