ஜனநாயகத்தை பாதுகாப்போம் : ஏகாதிபத்தியத்தை தோற்கடிப்போம் எனும் தொனிப்பொருளில் ஐக்கிய தேசியக்கட்சியின் மாபெரும் ஆர்ப்பாட்டம் இடம்பெறுகின்ற நிலையில் அலரிமாளிகை அற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சனக்கூட்டம் நிறைந்து காணப்படுவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்படுவதாக கொழும்புத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனைத் தொடர்ந்து அங்கு கலகமடக்கும் காவல்துறையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளதுடன் அப்பகுதி காவல்துறையினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது எனவும் நீர்த்தரைப் பிரயோகம் மேற்கொள்ளும் வாகனங்களும் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பின் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் 2 ஆயிரம் காவல்துறையினரும் 600 போக்குவரத்துப் காவல்துறையினரும் குவிக்கப்பட்டுள்ளதாகவும் இதைவிட 10 விசேட அதிரடிப்படையின் குழுக்களும் கடமையில் ஈடுபடுத்தப்படடுள்ளதாகவும் காவல்துறைதரப்பு செய்திகள் தெரிவித்துள்ளன. இதேவேளை, கொழும்பில் இடம்பெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் ஆர்ப்பாட்டக்காரர்கள் அரச நிறுவனங்களுக்குள் பிரவேசிக்க கொழும்பு நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் மற்றும் அமெரிக்க நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Add Comment