Home இலங்கை ஐக்­கிய தேசிய முன்­ன­ணி – சபாநாயகர் இன்று சந்திப்பு

ஐக்­கிய தேசிய முன்­ன­ணி – சபாநாயகர் இன்று சந்திப்பு

by admin


ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் இன்று சபா­நா­யகர் கரு ­ஜ­ய­சூ­ரி­யவை சந்­தித்து கலந்­து­ரை­யா­ட­வுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று காலை பாரா­ளு­மன்ற கட்­ட­டத்­தொ­கு­தியில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பாரா­ளு­மன்றம் அடுத்­த­வாரம் கூடும்­போது பிர­தமர் மஹிந்த ராஜ­ப­க்ஸவுக்கு உரிய ஆசனம் ஒதுக்­கப்­படும் என சபா­நா­யகர் உறு­தி­ய­ளித்­துள்ளதாக தெரிவிக்கப்படும் நிலை­யில் ஐக்­கிய தேசிய முன்­னணி உறுப்­பி­னர்கள் அவரைச் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­து­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

ரணில் விக்­கி­ர­ம­சிங்­க தலை­மையில் நேற்று நடை­பெற்ற பாரா­ளு­மன்றக் குழுக்­கூட்­டத்­தி­லேயே இந்தத் தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ளது. அதேவேளை சபாநாயகருக்கும் சில அரசியல் கட்சி தலைவர்களுக்கும் இடையிலும் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More