வவுனியாவில் இருவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டு முல்லைத்தீவில்; அரசியல்கட்சியின் அலுவலகம் ஒன்றில் ஒரேகட்சியை சேர்ந்தவர்களிடையே ஏற்பட்ட கைகலப்பின் போது ஒருவரை தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டு தொடர்பில் எதிரிகளாக பார்க்கப்பட்ட இருவருக்கே இவ்வாறு வவுனியா மேல்நீதிமன்றம் மரணதண்டனை விதித்துள்ளது.
குறித்த வழக்கு விசாரணைகள் முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் நடைபெற்று வந்தநிலையில் மேலதிகவிசாரணைகளுக்காக 2017 ஆம் ஆண்டு சட்டமாஅதிபர் திணைக்களத்தினால் வவுனியா மேல் நீதிமன்றில் எதிரிகளுக்கெதிராக குற்றப்பத்திரம் தாக்கல்செய்யபட்டு வழக்கு விசாரணைகள் இடம்பெற்றுவந்தன.
இந்நநிலையில் விசாரணைகள் நிறைவுற்று இன்றையதினம் தீர்ப்பிற்காக ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் சந்தேகநபர்கள் இருவரும் நீதிமன்றில் முன்னலைப்படுத்தப்பட்ட நிலையில் இருவரையும் குற்றவாளிகளாக கண்ட நீதிமன்றம் இவ்வாறுமரணதண்டனை வழங்கி தீர்பளித்தமை குறிப்பிடத்தக்கது.
Add Comment