உலகம் பிரதான செய்திகள்

சீனாவில் இடம்பெற்ற விபத்தில் 14 பேர் பலி


சீனாவில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பாரவூர்தி எதிரில் வந்த வாகனங்களுடன் மோதி ஏற்பட்ட விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் மீட்புப்படையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த விபத்தில் இதுவரை 14 பேர் பலியாகி இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

மேலும், 30-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.