பிரதான செய்திகள் விளையாட்டு

நியூசிலாந்துக்கெதிரான இருபதுக்கு 20 தொடரை 3-0 என பாகிஸ்தான் கைப்பற்றியுள்ளது


பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 போட்டித் தொடரினை 3-0 என பாகிஸ்தான் கைப்பற்றியுள்ளது. இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் வென்றிருந்த பாகிஸ்தான், துபாயில் நேற்று இடம்பெற்ற மூன்றாவது போட்டியிலும் வென்றதைத் தொடர்ந்தே 3-0 என நியூசிலாந்தை வெள்ளையடித்தது.

இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான், 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 166 ஓட்டங்களைப் பெற்றது. இதனையடுத்து 167 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து, 16.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 119 ஓட்டங்களையே பெற்று 47 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
இதனைத் தொடர்;ந்து பாகிஸ்தான் தொடரினை 3-0 என கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap