பிரதான செய்திகள் விளையாட்டு

தரவரிசையில் ஜோகோவிச் மீண்டும் முதலிடம்


உலக டென்னிஸ் வீரர் தரவரிசைப்பட்டியலில் ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் செர்பியா வீரர் ஜோகோவிச் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். உலக டென்னிஸ் வீரர்-வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் நேற்று வெளியிட்ட நிலையில் ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் ஜோகோவிச் 8,045 புள்ளிகளுடன் ஒரு இடம் முன்னேறி மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார்.

முதலிடத்தில் இருந்த ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் 7,480 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு பின்தளப்பட்டுள்ளார். சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் 6,020 புள்ளிகளுடன் மூன்றாட் இடத்திலும் அர்ஜென்டினா வீரர் ஜூவான் மார்ட்டின் டெல்போட்ரோ 5,300 புள்ளிகளுடன் 4ம் இடத்திலும் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரே 5,085 புள்ளிகளுடன் 5ம் இடத்திலும் உள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.