ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவைத் தெரிவிப்பதற்கு தீர்மானித்துள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியின் உத்தியோகப்பூர்வ டுவிட்டர் வலைத்தளத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூம் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரிஷாத் பதியூதீன் ஆகியோர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவிக்கும் விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், நாடாளுமன்றத்தை விரைவில் கூட்டுவது தொடர்பான நிலைப்பாட்டில் ஐக்கிய தேசியக் கட்சி உறுதியாகவிருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Spread the love
Add Comment