உலகம் பிரதான செய்திகள்

தஜிகிஸ்தானில் சிறைச்சாலையில் கலவரம் – பாதுகாப்பு படையினரின் துப்பாக்கிப்பிரயோகத்தில் 27 பேர் பலி


தஜிகிஸ்தானில் சிறைச்சாலையில் யில் ஏற்பட்ட கலவரத்தில் 27 கைதிகள் உயிரிழந்துள்ளனர் என முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.  சிறைச்சாலைக்குள் இருந்த கைதிகளுக்கிடையே ஏற்பட்ட முரண்பாடு பின்னர் கலவரமாக மாறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பாதுகாப்பு படையினர் அங்கு வரவழைக்கப்பட்ட போதும் அவர்கள் கைதிகள் கலவரத்தை கைவிடாமையினையடுத்து பாதுகாப்பு படையினர் அவர்கள் மீது மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் 27 கைதிகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2 பாதுகாப்பு படையினரும் பலியானதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் சிறையில் மேலும் கலவரம் பரவாமல் இருக்க பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers